• July 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் (சி.எம்​.ஆர்​.எல்.) பயண அட்​டையி​லிருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு ஆக. 1-ம் தேதி​முதல் முழு​மை​யாக மாற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் மெட்ரோ ரயில்​களில் பயணிக்க வசதி​யாக, சி.எம்​.ஆர்​.எல். பயண அட்​டை​யுடன் கூடு​தலாக தேசிய பொது போக்​கு​வரத்து அட்டை (சிங்​கார சென்னை அட்​டை) கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 14-ம் தேதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டது.

இந்த அட்டை பயன்​படுத்​து​வோரின் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரித்​தது. மேலும் இந்த அட்​டையை மாநகரப் பேருந்துகளிலும் பயன்​படுத்​தும் திட்​டம் ஜன.6-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இதன்​பிறகு, சிங்​கார சென்னை அட்டை பயன்படுத்துவோர் எண்​ணிக்கை நாள்​தோறும் அதி​கரிக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *