
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘கூலி’. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பவர் ஹவுஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘Chikitu’ மற்றும் ‘மோனிகா’ பாடல்களின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிளாக ‘பவர் ஹவுஸ்’ பாடல் வெளியாகி உள்ளது.