
நேற்று துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இது குறித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், “இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் உடல்நிலை காரணத்திற்காக என்பது ஆகும்.
எனக்கு ஜக்தீப் தன்கர் ஜியைத் தெரிந்தது வரை, சந்திரசேகர் ஜி காலத்தில், நாங்கள் அவரிடம் பணிபுரிந்தோம். அப்போது அவரை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் மிகுந்த போராட்ட குணம் உடையவர் ஆவார்.
அரசியலில் எங்கோ ஏதோ ஒன்று நடக்கிறது என்று நினைக்கிறேன். அது அவருக்கு தெரிந்திருக்கிறது. அது பீகார் தேர்தல் சம்பந்தமானதாக கூட இருக்கலாம். இது அவரை பாதிக்கும் என்று தெரிந்ததால் என்னவோ, அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
அவருடைய ராஜினாமா இன்னும் முழுமையாக ஏற்றுகொள்ளப்படவில்லை. அதற்குள் அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார் என்பது போன்ற செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது. ஆக, ஏதோ ஒன்று சரியில்லை” என்று கூறியிருக்கிறார்.