
சென்னை: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுயஉதவி குழு பெண்கள் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, அவற்றின் செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் 4.08 லட்சம் குழுக்களுக்கு ரூ.21,392 கோடியும், 2022-23-ம் நிதி ஆண்டில் 4.49 லட்சம் குழுக்களுக்கு ரூ.25,642 கோடியும், 2023-24-ம் நிதி ஆண்டில் 4.79 லட்சம் குழுக்களுக்கு ரூ.30,074 கோடியும் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து, கடந்த 2024-25-ம் நிதி ஆண்டில் 4.84 லட்சம் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி கடன் வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்தது.