
புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியது. அப்போது வீட்டில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது. அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இதை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.