• July 22, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

ஆஹா கல்யாணம்  தொடர்பாக  சென்ற வாரம் நடந்த என் கல்லூரித் தோழி பத்மா சுப்பிரமணியத்தின்   சதாபிஷேக கல்யாணம் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.  

தோழிகள் அத்தனை பேருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்து கண்டிப்பாக வரவேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்திருந்தாள்.

அமெரிக்கத் தோழி லதா தவிர்த்து மற்றபடி மைசூரில் இருந்து சுமதியும் பெங்களூரிலிருந்து சாவித்திரி நீலாவும் சென்னையிலுள்ள மற்றதோழிகள் சரோஜா, சாந்தா வெண்ணிலா , பிரகன்நாயகியும் ,விஜியும் மும்பையிலிருந்து நானும் வந்து கலந்து கொண்டோம்.

எப்போதும் புதல்வர்கள் புதல்விகள்  திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பிப்போம். இப்போது எங்கள் அன்புத் தோழியின் சதாபிஷேகத்தை விடுவோமா! 

கோலாகலமாக நடைபெற்ற விழா எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

பத்மாவின் மகனும் மகளும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்தார்கள். எங்கள் நட்பின் சங்கமத்தை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

மிக அழகான ஒரு பட்டுச் சேலையும் ஜாக்கெட்டும் , அருமையான ஒரு வேஷ்டி ஷர்ட்டும்  எங்கள் அனைவரின் சார்பிலும் பரிசளித்தோம்.அவள் ஒரு சாயிபக்தை என்பதால் அழகான ஒரு சாயி சிலையையும் அன்புடன் பரிசளித்தோம். 

அவள் எல்லோருக்கும் புடவை வேஷ்டியுடன் பட்சணமும் தந்து சிறப்பித்தாள்.

பத்மா என்பதால் ஆயிரம் மலரில்  ஒரு மலர் நீயே! தூய்மையின் சுடரே! தாய்மையின் வடிவே ! என்று வாழ்த்தி மகிழ்ந்தேன். வெண்ணிலா, தமிழ்க் குமரனை மணந்த தாமரையாள் என்றாள் . சாவித்திரியின் மடலை இங்கே  பதிவு செய்திருக்கிறேன். சாஸ்திரோக்தமாக விமரிசையாக  உறவு நட்பு சங்கமத்துடன் நடந்த திருமண விழா எல்லோர் மனதிலும் பரவச அலைகளை ஏற்படுத்தியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *