
சென்னை: தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுக்கிறது என்று, சென்னையில் நடைபெற்ற மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டினார். சென்னை, ராணி மேரி கல்லூரியின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற 100 மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கினார்.