
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
கார் ரேஸ்.
ஒலிபெருக்கியில் அஜித்குமார் நடித்த திரைப்படமான குட் பேட் அஃலி மற்றும் வேதாளம் படங்கள் பற்றிய விபரங்கள், அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்ற பாராட்டை கேட்டு எங்களுக்கு பெரும் ஆச்சர்யம். இதில் என்ன ஆச்சர்யம், அவரை பற்றி இப்படி தானே வர்ணிப்பர் என்று தானே தோன்றுகிறது உங்களுக்கு. சொல்கிறேன்.
இந்த வர்ணனையாவும், நம் இந்திய மண்ணில் அல்ல. பல மையில்களுக்கு அப்பால் இருக்கும் இத்தாலியில் என்று நான் கூறினால் அது உங்களுக்கும் ஆச்சர்யம் தானே?
ஆம், இப்படி தான் அவரது intro துவங்கியது. பல இத்தாலியர்கள் கூட அவருடன் போட்டி போட்டு கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவரும் எப்பொழுதும் போன்றே சலிக்காமல் அனைவருக்கும் தன் கையெழுத்திட்டு கொண்டிருந்தார்.
இம்முறையும் இத்தாலியின் மிஷனோ (Misano) நகரத்தில் நடக்கவிருந்த கார் பந்தயத்தை காண மிலானிலிருந்து குடும்பத்துடன் சென்றிருந்தோம்.
வெள்ளி துவங்கி ஞாயிறு வரை நடக்கவிருக்கும் கார் பந்தயத்திற்கு எங்களை போன்றே பல தமிழ் சொந்தங்களும் வந்து சேர்ந்தனர்.

பின் ஒரு ஐந்து நிமிடங்களில் சொல்லியது போலவே வந்து அங்கே காத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு ரசிகருடனும் புகைப்படம் எடுத்து கொண்டார்.

நான் சென்ற முறை இத்தாலியில் Mugello-வில் அவரை சந்தித்தபொழுது அவருடனும் அவரது குழுவினருடனும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை ஆல்பமாக செய்து இம்முறை அதை அவரிடமே காட்டி ஆட்டோகிராப் வாங்க ஆசை கொண்டேன்.
இம்முறை அந்த ஆசையும் இனிதே முடிந்தது பெரும் மகிழ்ச்சி. ஆம், அந்த ஆல்பத்தின் பக்கத்தில் அவரது அழகிய கையெழுத்து பதிவானது.

அதே போன்று Sicily தீவிலிருந்து வந்த அஜித் ரசிகர்களும் அவர்களது டீ-ஷர்ட், தொப்பி என்று நீட்டி நீட்டி அஜித் அவர்களது ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தனர். சென்ற முறையும் இவர்களை பற்றி நான் எழுதியதையும் காணலாம்.
அதுமட்டுமல்ல, Jasmine என்ற ஒரு ரசிகை அவரிடம், உங்களை போன்றே நாங்களும் கீழ்தட்டில் இருந்து வந்துள்ளோம், எங்களை போன்ற ரசிகர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்க, அவரும் “Love you all” என்று கூறியதை கேட்ட அந்த ரசிகையின் சந்தோசம் அடங்க மணிக்கணக்காகியது.

அனைவருக்கும் புன்முறுவலுடன் கையெழுத்திட்டு, புகைப்படங்களும் எடுக்க நின்று பின் எங்களிடம் இருந்து விடைபெற்றார்.
இது போன்ற சந்தர்ப்பங்களின் மூலம், நம் தமிழ் சொந்தங்கள் பெருகி கொண்டே இருக்கிறது. ஆம், ஒவ்வொரு முறையும் நான் பல புதிய தமிழ் சொந்தங்களை இங்கு சந்திக்கிறேன்.
அடுத்து, சனிக்கிழமை.
அஜித் அவரது பந்தயம் மதியம் இரண்டு மணிக்கு துவங்குவதாக இருந்தது. அப்படி கார் பந்தயம் துவங்கும் முன், “கிரிட் வாக்” நடைபெறுவது வழக்கம். அதாவது, பந்தயத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கார்களும் வரிசையில் நிற்கவைத்து பொதுமக்கள் அதை பார்வை இட அனுமதிக்கப்படுவார்கள்.

அதுவும், டிக்கெட் வாங்கிய அனைத்து மக்களுக்கும் அனுமதியல்ல. வெகு சிலரே அவ்வாறு அனுமதிக்க படுவார்கள். குறிப்பாக, ஸ்பான்சர்கள், பெரிய பெரிய கார் கம்பெனியின் சிறப்பு விருந்தாளிகள், மீடியா நண்பர்கள் என்று பலரும் கலந்து கொள்வார்கள்.
நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு அது கடினமே. நாங்களும் அதில் எப்படியாவது பங்கு கொள்ளவேண்டும் என்று எண்ணி அங்கிருந்த ஆபீஸில் சென்று விசாரித்தோம். இது போன்ற நுழைவுகளுக்கு சிறப்பு அழைப்புள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், இதை அவர்கள் யாருக்கும் விற்பதில்லை என்றும் தெரிவித்தனர்.
அதை அறிந்ததும் வாடிப்போன எங்கள் முகத்தை பார்த்த ஒரு officer, நான் இந்தியர் என்று அறிந்து கொண்டு நாங்கள் குமார் அவர்களை பார்க்க வந்திருக்கிறோமா என்று வினவினார். முதலில் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, பின் தான் தெரிந்தது இவர்கள் அஜித்குமாரை தான் குமார் என்று அழைப்பது.
ஆம், நாங்கள் அவரின் தீவிர ரசிகர்கள் என்று கூறியதும் எங்களை பார்த்துவிட்டு, நாம் எவ்வாறு அவரின் மீது அவ்வளவு அன்பு வைத்துளோம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஆச்சர்யத்துடன் கூறி, எங்களுக்காக சில சிறப்பு அழைப்பிதழ்களை இலவசமாக வழங்கினார்கள்.
எங்களின் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. முகத்தை பார்த்தாலேயே தெரிந்திருக்குமே. ஆம், அந்த மஞ்சள் நிற band-டுடன் உங்கள் மகேஷ்.



Qualifying 1-ல் 144.6 kmph வேகத்தில் 5 சுற்றுகளும், qualifying 2-ல் 144.3 kmph வேகத்தில் 3 சுற்றுகளும் முடித்தார். பின் நடந்த ரேஸ் 1-ல் 33 சுற்றுகளை வெற்றிகரமாக முடித்தார்.
பின் மாலையில் அனைத்து ரசிகர்களும் ரேஸ் வீரர்களை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அங்கு சென்று முதல் கையெழுத்தாக அஜித்குமார் கையெழுத்து தான் வாங்கினோம்.
தன் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் இடும் அஜித்தும், அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிய சந்தோசத்தில் அவரது ரசிகர்களும் இதோ.

கார் பந்தயம் முடிந்ததும் மீண்டும் அவருடன் பல புகைப்படங்கள் எடுத்து கொண்டோம். ஒவ்வொரு பந்தயத்திலும், ஒவ்வொரு நாளும் நாங்கள் அவருடன் புகைப்படம் எடுப்பதை புரிந்து கொண்ட அவர், இம்முறை வெளிப்படையாகவே கேட்டுவிட்டார் – உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என்று.
இதுக்கு தானே மணிக்கணக்கா காத்து கொண்டிருக்கிறோம், எங்களுக்கு எப்படி போர் அடிக்கும் என்று கூறியதும் சிரித்து கொண்டே எல்லோருடனும் புகைப்படம் எடுத்து கொண்டார்.
மறுநாள், ஞாயிறு.
இன்று தான் இறுதி கட்ட பந்தயம். காலையில் அவரது காரை ட்ராக்கில் கண்டு ஆர்வத்துடன் பந்தயத்தை காண காத்துக்கொண்டிருந்தோம். பந்தயமும் துவங்கியது. அஜித் அவர்களும் தன் திறமையை கொண்டு சீறி கொண்டிருந்தார்.


கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டருக்கு மேல் உள்ள அந்த ட்ராக் 16 வளைவுகளை கொண்டது.
அவர் கார் சீறிக்கொண்டு சென்றதை காணும்பொழுது ஏனோ எங்களுக்கு என்ஜின் சத்தமே கேட்கவில்லை. பத்து அனிருத்தும் இருபது G.V பிரகாஸும் சேர்ந்து இயற்றிய ஒரு மாஸ் BGMமுடன் அஜித்குமார் கார் நம் கண்முன்னே பறந்துகொண்டிருப்பது போன்றே தோன்றியது.
ஆனால், பந்தயம் துவங்கி ஒரு 10 நிமிடத்திற்குள் அஜித்குமார் அவர்களின் கார் விபத்தில் சிக்கியது என்று ஒலிபெருக்கியில் கேட்டதும் எங்களுக்கு பெரும் வருத்தம் சூழ்ந்தது. அந்த தருணத்தில் மொத்தத்தில் அவர் வெறும் எட்டு சுற்றுகளையே முடித்திருந்தார்.
ஓடி சென்று விபத்தில் சிக்கிய காரை கண்டோம். தன் காரின் முன்னே சென்று கொண்டிருந்த BMW கார் ஒன்று விபத்தில் சிக்கி சுழன்று ட்ராக்கின் நடுவிலேயே நின்றது. அதன் பின்னே வந்து கொண்டிருந்த மற்றோரு கார் லாவகமாக அதை கடந்து சென்றது.
ஆனால், ட்ராக்கின் நடுவில் நின்று கொண்டிருந்த காரை சற்றும் எதிர்பார்க்காத அஜித், அவரால் முயன்ற வரை தவிர்க்க நினைத்தும் முடியாமல் போகவே நேருக்கு நேர் மோதிவிட்டார்.


நல்ல வேலையாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. காரிலிருந்து இறங்கிய அஜித்குமார், சிதறி கிடந்த கார் பாகங்களை சேகரிக்க உதவினார். இதை ட்ரோன் மூலமாக கவனித்து கொண்டிருந்த ரேஸ் வர்ணனையாளர் அவரை மிகவும் பாராட்டினார். பல பந்தய வீரர்கள் இதுபோன்று செய்வதில்லை என்றும், அஜித் சிறந்த வீரர் என்றும் பெருமிதமாக தெரிவித்தார்.
1 மணி நேரமே நடைபெறும் இந்த பந்தயத்தில் வேறு கார் கொண்டு மீண்டும் ஓட்டுவது இயலாத காரியமாதலால் அவர் பந்தயத்தின் பாதியிலேயே திரும்பிவிட்டார்.
பின் அவர் ஒரு ஸ்கூட்டர்-ரில் திரும்பும் போதும் வழியில் நின்றிருந்த எங்களை கண்டு கையசைத்து சென்றார். அவரது முகத்தில் எந்தவித சலனமோ பரிதவிப்போ இல்லை. தன் வாழ்க்கையில் பல வெற்றி தோல்விகளை கண்ட அவருக்கு இது போன்ற ஒரு தோல்வி சாதாரணமே.
வெற்றி தோல்வி மட்டுமே விளையாட்டில்லை. ஆர்வமும் துடிப்பும் கொண்டு பங்கு கொள்வதே ஒரு விளையாட்டின் முதல் வெற்றி என்பது அவருக்கு தெரியாதா என்ன?
அதேபோல் எந்த ஒரு தோல்வி தன்னை தாக்கும் பொழுதும் அத்தோல்வியின் தாக்கம் தன் ரசிகர்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள அவரை விட வேறு யாரால் முடியும்?
எப்படியோ, கண்மூடி கண் திறப்பதற்குள் ரேஸ் முடிந்தது, நாட்களும் உருண்டோடியது. அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு எப்பொழுது கிடைக்குமோ என்ற எண்னத்திலேயே அங்கிருந்து விடைபெற்றோம். நடைபெற்ற விபத்தின் காரணமாக, இம்முறை, அவரை நேரில் சந்திக்கவோ மீண்டும் புகைப்படம் எடுக்கவோ மனமின்றி அங்கிருந்து நகர்ந்தோம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
