
சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தை ரூ.360 கோடி மதிப்பில் 4-வது முனையமாக மாற்றவும், பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 6.4 கி.மீ. தொலைவுக்கு 5,6-வது புதிய பாதைகள் அமைக்கவும், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, பெரம்பூர் ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.