
நாகர்கோவில்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆண்டுதோறும் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் ஆர்எஸ்எஸ் மற்றும் விவேகானந்த கேந்திர நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி வந்தார். விவேகானந்தா கேந்திராவில் தங்கியிருக்கும் அவர், விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகள் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.