
சென்னை: மக்கள் விரோத ஸ்டாலினின் தோல்வி மாடல் (Failure Model) ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்" என்கிற உயரிய லட்சியத்துடன், மக்கள் விரோத ஸ்டாலினின் Failure Model ஆட்சியை அகற்ற கோவையில் ஜூலை 7ம் தேதி அன்று துவங்கிய எழுச்சிப் பயணத்திற்கு இமாலய வெற்றியை தொடர்ந்து வழங்கி வரும் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!