
புதுடெல்லி: ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிக்குமாறு ராகுல் காந்தி நேற்று கேள்வியெழுப்பியிருந்தார். இதனை விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தொடர்ச்சியான தோல்விகள் ராகுல் காந்தியை சித்தாந்த வெறுமையின் படுகுழியில் தள்ளியுள்ளது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தொடர்ச்சியான தோல்விகள் ராகுல் காந்தியை சித்தாந்த வெறுமையின் படுகுழியில் தள்ளியுள்ளது. பாஜகவை எதிர்ப்பதில் தொடங்கி, அவர் இந்தியாவையே எதிர்க்கும் நிலையை அடைந்துவிட்டார். நாட்டின் கண்ணியத்தை கெடுக்க அவருக்கு ஒரு சாக்கு தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார், சில சமயங்களில் அவர் மற்ற நாடுகளின் கதைகளை ஊக்குவிக்கிறார்.