
சென்னை: “எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி அமலாக்கத்துறை, வருமானவரித் துறையின் பிடியில் இருக்கிற வரை அமித் ஷாவின் பிடியில் இருந்து அதிமுக மீள முடியாது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014 மக்களவை தேர்தலில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, நரேந்திர மோடிக்கு எதிராக மோடியா? லேடியா? என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். 2016-ல் அவர் மறையும் வரை நீட், உதய் மின்திட்டம் உள்ளிட்ட தமிழக மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற மறுத்து வந்தார்.