
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு உடனடியாக செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.600 கோடியை தமிழக அரசு இன்னும் செலுத்தாத காரணத்தால், தனியார் பள்ளிகளில் பயிலும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை தமிழக அரசு அறிந்திருந்தும் மாணவர்களின் கல்வியைக் காக்க நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.