
தனது அடுத்த படத்தில் அனிருத்துடன் பணிபுரிய வெங்கட்பிரபு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இதற்கான கதையினை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.