
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.
கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. 1970-ல் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய மு.க முத்து ‘பூக்காரி’, ‘பிள்ளையோ பிள்ளை’, ‘அணையா விளக்கு’, ‘சமையல்காரன்’, ’இங்கும் மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
கருணாநிதியின் கலையுலக வாரிசாகக் கருதப்பட்ட இவர் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்திருக்கிறார்.
அவரின் உடலுக்கு ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். மூத்த நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுகவினரும், திரையுலகினரும் மு.க.முத்துவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.














Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.