
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ளது இஸ்லாம்பூர். இந்தப் பகுதியின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பான ஷிவ் பிரதிஸ்டான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கை கடந்த 1986-ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் கடைசிநாள் அலுவல்கள் நேற்று நடைபெற்றன. அப்போது, உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர் சாகன் புஜ்பால் பேசும்போது, ‘‘சாங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர், ஈஸ்வர்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்’’ என்றார்.