
‘பைனலி' யூடியூப் மூலம் பிரபலமான பாரத் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மிஸ்டர் பாரத்’. நிரஞ்சன் இயக்கியுள்ள இதில், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்கின்றனர். இதை பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் நிறுவனங்கள் சார்பாக சுதன் சுந்தரம்,லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரணவ் முனிராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.