• July 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மின்​வாரிய ஊழியர்​களுக்​கான ஊதிய உயர்வு பேச்​சு​வார்த்தை வரும் 24-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்​பாக தொழிற்​சங்​கங்​களுக்கு அழைப்பு விடுத்து மின்​வாரி​யம் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறியிருப்​ப​தாவது: கடந்த 2023-ம் ஆண்டு டிச. 1-ம் தேதி முதல் மின்​வாரிய ஊழியர்​களுக்கு ஊதிய உயர்வு வழங்​கப்பட வேண்​டும்.

இது தொடர்​பாக ஊதிய திருத்​தத்​துக்​கான பேச்​சு​வார்த்தை குழு தலை​வர் தொழிற்​சங்​கங்​களு​டன் ஆலோசனை நடத்த உள்​ளார். இந்த பேச்​சு​வார்த்தை ஜூலை 24-ம் தேதி காலை 11.30 மணி அளவில் நடை​பெற உள்​ளது. இதில் சங்​கங்​கள் சார்​பில் தலா 3 பிரதிநிதிகள் பங்​கேற்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *