
சென்னை: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஆக.18-க்கு தள்ளிவைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.