• July 19, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி: சிவ​காசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்​கிய சம்​பவத்தை கண்​டித்​தும், பணி பாது​காப்பு கேட்​டும் ஆசிரியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சிவ​காசி அருகே திருத்​தங்​கல் எஸ்​.ஆர்​.என். அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் மது அருந்​தி​விட்டு பள்ளிக்கு வந்த மாணவர்​களை கண்​டித்த ஆசிரியர் சண்முக சுந்​தரத்தை நேற்று முன்​தினம் மாணவர்​கள் இரு​வர் பாட்​டிலால் தாக்கினர்.

ஆசிரியரை தாக்​கிய 2 மாணவர்​களை கைது செய்த போலீ​ஸார், சிறார் கூர்​நோக்கு இல்​லத்​தில் சேர்த்​தனர். இதே பள்​ளி​யில் 2023 டிசம்​பரில் ஆசிரியரை 2 மாணவர்​கள் கத்தி மற்​றும் அரி​வாளால் தாக்​கியது குறிப்​பிடத்​தக்​கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *