
சென்னை: ஜென்-ஜி இளைஞர்களை கவரும் வகையில், சென்னையை சூப்பர் சென்னையாக மாற்றும் பிரச்சார இயக்கத்தை கிரடாய் சென்னை அமைப்பின் தலைவர் ஏ.முகமது அலி தொடங்கி வைத்தார்.
சென்னையை சூப்பர் சென்னையாக விளம்பரப்படுத்தும் விதமாக, கிரடாய் சென்னை அமைப்பின் ஆதரவுடன், ‘சூப்பர்சென்னை’ என்ற பிரச்சார இயக்கம், சென்னை அண்ணாசாலையில் நேற்று தொடங்கப்பட்டது.