
ஹைதராபாத்: ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், அதிபட்லா அருகே வெளிவட்ட சாலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம், அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஹைதராபாத்தை சேர்ந்த சந்துலால் (29), கூகுலோத் ஜனார்தன் (50), காவலி பாலராஜு (40). கிருஷ்ணா, தாசரி பாஸ்கர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அதிபட்லா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.