• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வழக்கு விசா​ரணைக்​காக நீதி​மன்​றத்​தில் சாட்சி சொல்ல ஆஜரா​காத சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலரை கைது செய்து இன்று ஆஜர்​படுத்த சென்னை சிட்டி சிவில் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இது தொடர்​பாக ரத்​தினச​பாபதி என்​பவர் சென்னை 19-வது கூடு​தல் சிட்டி சிவில் நீதி​மன்​றத்​தில் தனி​யார் கட்​டு​மான நிறு​வனம் உள்​ளிட்ட 4 பேருக்கு எதி​ராக கடந்த 2019-ம் ஆண்டு முறையான திட்ட அனு​மதிபெறாமல் கட்​டு​மானப் பணி​களை மேற்​கொண்​டுள்​ள​தாகக் கூறி வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த கூடு​தல் சிட்டி சிவில் நீதி​மன்ற நீதிபதி ராஜ்கு​மார், இந்த வழக்​கில் தேவைப்​படும் ஆவணங்​களை சமர்ப்பிக்க மனு​தா​ரர் தரப்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ள​தால், சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​தின் (சிஎம்​டிஏ) உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராகி சாட்​சி​யம் அளி்க்க வேண்​டு மென சம்​மன் பிறப்​பித்து கடந்த ஜூன் மாதம் உத்​தர​விட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *