
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘உப்பு கப்புறம்பு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் தனியார் நிறுவனத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டியளித்திருந்தார். அதில், “இந்தப் படத்தின் படப்பிடிப்பு வீட்டில் இருப்பது போல இருந்தது. முற்றிலும் நிதானமாக, பொறுமையாக நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், நான் உண்மையில் இன்னும் கொஞ்ச நாள்கள் படப்பிடிப்பு இருந்திருக்கலாம் என வருத்தப்பட்டேன்.
அதுதான் நகைச்சுவையின் மந்திரம். நீங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ள நிறைய அறிவுகளை, அனுபவங்களை வழங்கக்கூடிய, அர்த்தமுள்ள விவாதங்கள், உரையாடல்களை நடத்தக்கூடிய ஒரு இடத்தில் பணிபுரியும் போது அது சிறப்பான அனுபவமாக இருக்கும். அதுதான் நம் வேலை என்பதைக் கடந்து உள்ளிருந்து தானாக எல்லாம் நடக்கத் தொடங்கும். அப்படியான வேலைதான் உங்களை மகிழ்ச்சியாகவும் உணர வைக்கிறது. உப்பு கப்புறம்பு படத்தின் நகைச்சுவையும், அதனுடன் அது கொண்டுவரும் செய்தியும்தான் என்னை ஈர்த்தது.
இந்தப் படத்தின் அபூர்வா கதாபாத்திரம் புத்துணர்ச்சியூட்டும் வித்தியாசமான கதாபாத்திரம். அவர் இலட்சியவாதி, உறுதியானவர். குறிப்பாக நமது கிராமப்புற கலாச்சாரத்தில் அபூர்வா கதாபாத்திரத்தை உயிர்ப்பித்தது ஒரு முழுமையான மகிழ்ச்சியாக இருந்தது. இந்தத் திரைப்படம் நகைச்சுவையைப் பயன்படுத்தி ஒரு தீவிரமான விஷயத்தை முன்னிலைப்படுத்துகிறது. எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம் என்றில்லை.

சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன். அப்படி ஆகிவிட்டால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன், அப்போது நல்ல மியூசிக் கேட்பேன். அதுமட்டுமின்றி, வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். அப்செட் என்ன வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் அவை அனைத்தும் காணாமல் போய்விடும்” என்கிறார்.
1897ஆம் ஆண்டு பிராம் ஸ்டோக்கர் எழுதிய ‘டிராகுலா’ நாவல் இன்று வரை ஹாரர் நாவல்கள் வரிசையின் சக்கரவர்த்தியாக இருக்கிறது. ஹாரர் நாவல்களில் பிதாமகாக இருக்கும் டிராகுலா மர்மக் கதையை, முழுமையான ஆடியோ அனுபவமாக, Vikatan Playல் நீங்கள் கேட்கலாம்!
https://www.vikatan.com/vikatan-play/dracula-audio-series