
ஜெய்ப்பூர்: இந்தியாவுக்கு துரோகம் செய்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார். சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய மக்களுக்கும், அதன் எல்லைக்கும், அதன் பாதுகாப்பு படைகளுக்கும் துரோகம் செய்யக் கூடாது என்ற வலுவான செய்தி உலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு துரோகம் செய்பவர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.