
சென்னை: சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரங்கள், ஏற்பாடுகளை படக்குழு தீவிரமாக செய்து முடித்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அன்று பொருளாதார பிரச்சினை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனையடுத்து ட்ரெய்லர் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பு காரணமாக படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.