• July 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள நாடாளு​மன்ற வளாகத்​தில் உறுப்​பினர்​கள், ஊழியர்​கள் மற்​றும் பார்​வை​யாளர்​களுக்​காக உணவகம் செயல்​பட்டு வரு​கிறது. அதில் ராகி சிறு​தானிய இட்​லி, சோள உப்​பு​மா, பாசிப்​பருப்பு தோசை மற்​றும் காய்​கறிகளு​டன் கூடிய வறுத்த மீன் உள்​ளிட்ட ஊட்​டச்​சத்​தான உணவு வகைகளை விநி​யோகிக்க நாடாளு​மன்ற உணவகம் திட்​ட​மிட்​டுள்​ளது.

மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லா​வின் வேண்​டு​கோளின்​படி, சுவையை தியாகம் செய்​யாமல் உடல் ஆரோக்​கி​யத்தை காக்​கும் வகை​யில் புதிய உணவு வகைகள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. சுவை​யான கறிகள் மற்​றும் விரி​வான 'தாலி'களு​டன் சிறு​தானி​யங்​களை அடிப்​படை​யாகக் கொண்ட உணவு​கள், நார்ச்​சத்து நிறைந்த சாலடு​கள் மற்​றும் புரதம் நிறைந்த சூப்​களும் வழங்​கப்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *