• July 16, 2025
  • NewsEditor
  • 0

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது புதிய விளம்பரமான ஃப்யூவல் யுவர் ஹஸ்டல் (Fuel your Hustle) மூலம் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த விளம்பரத்தில் இந்தியாவின் முன்னணி பிரபலங்களான நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிரிக்கெட் வீரர் பும்ரா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த விளம்பரம் வெற்றியின் பின்னணியில் உள்ள கடின உழைப்பு மற்றும் முயற்சியை எடுத்துக்காட்டு விதமாக அமைந்துள்ளது.

ஸொமேட்டோ

ஸொமேட்டோவின் இந்த விளம்பரம் கிரிக்கெட் வீரர் பும்ராவின் காட்சிகளுடன் தொடங்கி, ஷாருக்கான் அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெறுகிறது. ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரின் காட்சிகள் வருகின்றன.

இவர்களின் வெற்றிக்கு ரகசியமான மூலக்கூறு என்ன? புரட்சிகரமான வெற்றிக்கு மந்திரம் என்ன? என்று பின்னணி குரல் கேள்வி எழுப்ப, அதனை தொடர்ந்து இந்த பிரபலங்களின் பழைய பேட்டிகள் மேடை நிகழ்ச்சிகள் அதில் இடம்பெறுகின்றன. அதுமட்டுமில்லாமல் அவர்களின் வெற்றி உணர்ச்சிகரமான தருணங்கள், தோல்விகள், போராட்டங்கள் என எல்லாம் அதில் வெளிப்பட்டன.

அதன் பின்னர் அவர்கள் ஒரு வெற்றியை அடைந்த காட்சிகளும் இடம்பெற்றன.

ஸொமேட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் இந்த வீடியோவை பகிர்ந்து “இது ஒரு விளம்பரமல்ல முயற்சியின் மீதான நம்பிக்கை என்று பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களின் கனவுகள், பொறுப்புகள் அன்றாட வாழ்க்கையின் இடையில் சோமேட்டோவில் ஆர்டர் செய்கிறார்கள். சிலர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குகிறார்கள். சிலர் குழந்தை வளர்கிறார்கள். சிலர் ஓய்வு எடுக்கிறார்கள் ஆனால் அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளது தொடர்ந்து முயற்சி செய்வது.. நட்சத்திரங்களைக் கொண்டாட நாங்கள் இங்கு இல்லை, ஆனால் அவற்றை உருவாக்கிய நெருப்பைக் கொண்டாடுகிறோம்” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *