• July 15, 2025
  • NewsEditor
  • 0

பிட்காயின் (Bitcoin) எனும் மின்னணு நாணயத்தை உருவாக்கிய முகம் அறியப்பட்டாத சதோஷி நகமோட்டோ என்பவர், தற்போது உலகின் 12வது பணக்காரராக உயர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 128.92 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 11 லட்சம் கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

2009ல் பிட்காயினை உருவாக்கிய இவர், 2011ல் திடீரென மறைந்ததாக கூறப்படுகிறது. இவரது உண்மையான அடையாளம் இதுவரை வெளியாகவில்லை

கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனமான பிட்ஸ்டாம்பின் (Bitstamp) தகவலின்படி, சதோஷி நகமோட்டோவிடம் சுமார் 10.96 லட்சம் பிட்காயின்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மதிப்பு, தற்போதைய சந்தை விலையில், மைக்கேல் டெல் (Michael Dell) நிறுவனரின் 124.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை மிஞ்சியுள்ளது.

Bitcoin (Representational Image)

சதோஷி நகமோட்டோவின் அடையாளம் குறித்து பல யூகங்கள் உள்ளன. மென்பொருள் உருவாக்கியவர் ஹால் ஃபின்னி (Hal Finney), கணினி விஞ்ஞானி நிக் ஸ்ஸாபோ (Nick Szabo), தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி (Jack Dorsey) ஆகியோரின் பெயர்கள் இதில் அடிபடுகின்றன.

ஆனால், இவர்கள் அனைவரும் இதை மறுத்துள்ளனர். ஆஸ்திரேலிய கணினி விஞ்ஞானி கிரெய்க் ரைட் (Craig Wright) மட்டுமே தான் நகமோட்டோ என்று பலமுறை கூறியுள்ளார்.

ஆனால் அது உண்மையல்ல என்று 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து நீதிமன்றம் அவருக்கு 12 மாத சிறைத் தண்டனை விதித்தது. இந்த தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நகமோட்டோ 2011 வரை ஆன்லைனில் செயல்பட்டு வந்தார். நியூயார்க் போஸ்ட் (NY Post) அறிக்கையின்படி, இவர் 37 வயதுடைய ஜப்பானியர் எனக் கூறப்பட்டாலும், இவரது செயல்பாட்டு நேரங்கள் இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன.

பிட்காயினின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், சதோஷி நகமோட்டோவின் சொத்து மதிப்பும் மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *