
சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் மதுரையில் செப்.4-ம் தேதி மாநில அளவிலான மாநாடு நடைபெறும். இதில் பங்கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் நேற்று நடைபெற்றது.