
‘துரைமுருகன் பத்திரிகையாளர் சந்திப்பு!’
திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ரஜினி வேள்பாரி நிகழ்ச்சியில் பேசியது பற்றியும் விஜய்யின் அரசியல் விமர்சனங்கள் பற்றியும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
விகடன் பதிப்பகத்தில் வெளியான வேள்பாரி நாவல் விற்பனையில் 1 லட்சம் பிரதிகளைக் கடந்திருப்பதைக் கொண்டாடும் வகையில், வேள்பாரி வெற்றிப் பெருவிழா கடந்த வெள்ளியன்று நடந்திருந்தது.
‘ரஜினி அடித்த கமென்ட்!’
அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். ரஜினிகாந்த் பேசுகையில், ‘எ.வ.வேலுவோட புத்தக வெளியீட்டு விழால, திமுகல ஓல்டு ஸ்டூடண்ட்ஸ சமாளிக்கிறது கஷ்டம்னு பேசியிருந்தேன். அதுக்கு கிடைச்ச கைத்தட்டுல, அடுத்து சொல்ல வந்த ‘ஆனாலும் ஓல்டு ஸ்டூண்டஸ்தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவங்களோட அனுபவம்தான் பெரிய பலம் அப்டிங்றத சொல்ல மறந்துட்டேன்.’ என நகைச்சுவையாகப் பேசியிருந்தார்.

‘துரைமுருகன் ரியாக்சன்!’
ரஜினியின் இந்த கமென்ட் குறித்து துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘ரஜினிக்கிட்ட போன்ல பேசினேன். ரொம்ப தேங்ஸ் ரஜினி, இப்போவாச்சு மறக்காம பேசுனீங்களேன்னு சொன்னேன்!’ (நகைச்சுவையாக..). என்றார்.

‘விஜய்க்கு எச்சரிக்கை!’
தொடர்ந்து, ‘இந்த ஆட்சி முடியுறதுக்குள்ள நீங்க செஞ்ச தப்புகளை நீங்களே திருத்திடுங்கன்னு…’ விஜய் பேசியிருக்காரே என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு துரைமுருகன், ‘எங்களை கேள்வி கேட்கக் கூட விஜய் வரமாட்டாரா? எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்குக் கூட வர முடியாது.’ என்றார்.