• July 15, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அமெரிக்கா ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.

தக்காளி

அமெரிக்கா உடன் புதிதாக வர்த்தகம் போடும் நாடுகளுக்கு, வரி குறைக்கப்பட உள்ளது. இதற்காக, பல நாடுகளும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால், இது தொடர்பாக, மெக்சிகோ நடத்திய பேச்சுவார்த்தை கைக்கூடவில்லை.

இந்த நிலையில், ட்ரம்ப் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரி விதித்துள்ளார். இது அமெரிக்கா விவசாயிகளுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று அமெரிக்காவின் வணிகத் துறை கூறுகிறது.

அமெரிக்காவும் தக்காளியும்

அமெரிக்காவை பொறுத்தவரை, தக்காளி என்பது மிக மிக முக்கியமான உணவு ஆகும்.

அவர்களது பீட்சா, சாஸ் தொடங்கி பெரும்பாலான உணவுகளில் தக்காளி கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இப்படியிருக்கையில், தக்காளி மீது வரி என்பது மெக்சிகோவிற்கு எப்படி பலத்த அடியோ, அதே மாதிரி அமெரிக்காவிற்கு அடி தான்.

அமெரிக்காவிற்கான தேவையான 70 சதவிகித தக்காளி மெக்சிகோவில் இருந்து தான் வருகிறது. அமெரிக்க விவசாயிகளின் தக்காளியை விட, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளியின் விலை குறைவு.

தக்காளி சாஸ்

அதனால், பெரும்பாலும் தக்காளி மெக்சிகோவிற்கு இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்.

இதற்கு தான் தற்போது ட்ரம்ப் கடிவாளம் கட்டி உள்ளார். இந்த வரி நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது.

‘இது அமெரிக்க தக்காளி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல விஷயம்’ என்று ஆதரவும், ‘அமெரிக்காவின் முக்கிய உணவுப்பொருள்களில் ஒன்றான தக்காளி மீது வரி விதிப்பது தவறு’ என்று எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *