• July 14, 2025
  • NewsEditor
  • 0

இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் ஃபகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மாரீசன்’. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இழகுவான திரைப்படமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூருக்கு ஃபகத், வடிவேலு இருவரும் பைக்கில் பயணமாவதுதான் கதை.

Maareesan Exclusive: வடிவேலு கேரக்டரில் பகத் பாசில்… பகத் பாசில் கேரக்டரில் வடிவேலு! – ‘மாரீசன்’

திருடனாக இருக்கும் ஃபகத், வடிவேலுவிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க அவருடனே செல்ல நேரிடுகிறது. அடிக்கடி எல்லாவற்றையும் மறந்துவிடும் மறதியுடைய வடிவேலுவுடன் ஃபகத் மாட்டிக்கொண்டு எப்படியெல்லாம் தவிக்கிறார். இருவருக்குமிடையே என்னவெல்லாம் நடக்கிறது. இந்தப் பயணம் இருவரின் வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. வடிவேலு – ஃபகத் இருவருக்குமிடையே நடக்கும் மெல்லிய உணர்வுகளைக் கொண்டு மனதிற்கு இலகுவான கதையாக, காமெடியுடன் இப்படம் உருவாகியிப்பது இந்த ட்ரெய்லரிலேயே காண முடிகிறது.

மேலும் ஃபகத், வடிவேலு, கோவை சரளா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை என இப்படம் கூடுதல் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. இப்படம் இம்மாதம் ஜூலை 25ம் தேதி திரையரங்களில் வெளியாகவிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *