
அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்
‘தனிக்கட்சியா?’
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசியிருந்தார். தனிக்கட்சி ஆரம்பிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘எங்களைப் பொறுத்தவரை அதிமுகதான் எங்கள் உயிர்நாடி.’ என்றார்.
‘NDA விலிருந்து விலகல்!’
.
NDA கூட்டணியில் இன்னமும் இருக்கிறீர்களா எனும் கேள்விக்கு, ‘சட்டமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கிறது. எதிர்காலத்தில் முடிவெடுப்போம். எதிர்காலத்தில் எதுவும் நடக்கும்.’ என்றார்.
எடப்பாடி பழனிசாமியை இன்று விமர்சிக்கவே இல்லையே எனும் கேள்விக்கு, ‘எடப்பாடி விமர்சிக்க வேண்டிய நேரத்தில் விமர்சிப்போம்.

அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் வருத்தத்தில் இருக்கின்றனர். இன்றைய ஆட்சி அவலமாக இருக்கிறோம். அந்த ஆட்சியை போக்க ஒன்றிணைய வேண்டும்.
அதிமுகவில் இணைய நான் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ‘ என்றவர் மேலும், ‘மதுரை மாநாட்டுக்கு சசிகலாவையும் தினகரனையும் நிச்சயம் அழைப்போம்.’ என்றார்

விஜய்யின் அரசியல் நகர்வு பற்றிய கேள்விக்கு, ‘விஜய்யுடைய அரசியல் நகர்வு இன்று வரை நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் அவருடைய நகர்வைப் பொறுத்து எங்களுடைய தார்மீக ஆதரவு அவருக்கு உண்டு. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.’ என பொடி வைத்துப் பேசினார்.