• July 14, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் போன்ற பகுதிகளில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பூத் கமிட்டியை ஆய்வு செய்து வருகிறார்.

விருதுநகர் ரேசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே பூத் கமிட்டியை ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேறு மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

நயினார், எடப்பாடி பழனிசாமி

முதலில் நான்தான் கூறினேன்.

2026 -ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி ஆட்சி அமைத்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவதற்கான பணியை துவங்கியுள்ளோம்.

நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 25 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. அதில், ஒன்றே ஒன்றுக்கு மட்டும் தான் முதல்வர் மன்னிப்பு கேட்டு உள்ளார். விஜய் ஆர்ப்பாட்டம் குறித்து கேட்கிறீர்கள். ஜனநாயகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உரிமை. அவர் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளார் அது பற்றிய நான் கருத்து கூற முடியாது. ஆனால் 25 பேரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை முதன் முதலில் நான்தான் கூறினேன். அதை இன்று அவர் கூறியிருக்கிறார். என்றார்.

தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றிய கேள்விக்கு, “இதுகுறித்து நிறைய முறை பேசி விட்டேன். இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை இந்த கேள்வியை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்க வேண்டும். அவர்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய விசிக-விக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படுமா? அல்லது அமைச்சரவையில் பொறுப்பு தரப்படுமா? என்ற கேள்வியை கேட்க வேண்டும்”.

நயினார் நாகேந்திரன்

வருகின்ற தேர்தலில் பாஜக டெபாசிட் இழக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறியதைப் பற்றி கேட்ட கேள்விக்கு, “அதனை ஒரு தனி நபர் எப்படி கூற முடியும் கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து பின் வெற்றி, தோல்வி பற்றி முடிவு எடுக்கப்பட வேண்டும். அவர் கருத்துக்கணிப்பு நடத்தினாரா? அல்லது ஜோசியம் கூறுகிறாரா?. திமுக தான் பாசிச மாடல் மற்றும் அடிமை அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அவரது எம்.பிக்களும், அமைச்சர்களும் பெண்களைப் பற்றி தவறாக பேசுகின்றனர். இப்படிப் பேசும் அவர்கள் பாசிசமா? அல்லது பாஜக பாசிசமா?.”

பள்ளிகளில் ப வடிவில் மாணவர்கள் அமர வைக்கப்படுவது பற்றிய கேள்விக்கு, “இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைகள் பள்ளியின் மொட்டை மாடியில் வைத்து பாடம் கற்பிக்கப்படுவதாகவும், பள்ளிகளில் நிறைய அடிப்படை பிரச்னைகள் இருக்கிறது என சமூக வலைதளத்தில் நான் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தேன். முதல் வரிசை கடைசி வரிசை என்கின்றவை முக்கியமல்ல. படிக்கின்ற மாணவர்களுக்கு படிப்பதற்கான கட்டமைப்புகளை எவ்வாறு செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.”

நயினார் நாகேந்திரன்

`உங்களுடன் ஸ்டாலின்’ என்கின்ற நிகழ்வு தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது அது குறித்த கேள்விக்கு, “ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என உறுதி அளித்தார். ஆனால் எத்தனை வருடம் கழித்து தந்தார்கள். பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சிலருக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்து ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் விடுபட்டவர்களுக்கு தரப்படும் என கூறியிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்களை பகைக்கும் திமுக 2026-ல் ஆட்சிக்கு வராது” என அவர் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *