
2026 சட்டப்பேரவை தேர்தல் ஜுரம் தமிழகத்தில் இப்போதே தகிக்க ஆரம்பித்துவிட்டது. திமுக சார்பில் தேர்தல் பணிகளையும், பரப்புரைகளையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போது எடப்பாடி பழனிசாமியும் களத்துக்கு வந்துள்ளார். அவரின் பிரச்சாரம் எடுபடுகிறதா? மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
எம்ஜிஆர் காலம் முதலே அதிமுகவுக்கு அதிகம் கைகொடுப்பது கொங்கு மண்டலமும், தென்மண்டலமும்தான். ஓபிஎஸ், தினகரன் சலசலப்பால் தென்மண்டலத்தில் இப்போது அதிமுக சற்று சுணக்கமாக உள்ளது. இதனால் கொங்கு மண்டலமான கோவையிலிருந்து தனது ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தில், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்களை சந்தித்து வருகிறார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தில் தென்மாவட்டங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.