• July 14, 2025
  • NewsEditor
  • 0

நடிகை சரோஜா தேவி இயற்கை எய்தியிருக்கிறார். 87 வயதான அவர் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தியிருக்கிறார்.

அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சரோஜா தேவி

நடிகை சரோஜா தேவி குறித்து நடிகை குஷ்பு, “ஒரு சினிமா சகாப்தம் முடிவுக்கு வருகிறது. சரோஜா தேவி அம்மா எல்லாக் காலத்திலும் சிறந்த நடிகை. தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும் அவரைப் போல பெயரையும் புகழையும் அனுபவித்ததில்லை.

அவர் மிகவும் அன்பானவர். அவருடன் ஒரு சிறந்த உறவு இருந்தது. அவரைச் சந்திக்காமல் பெங்களூருக்கான எனது பயணம் முழுமையடையாது. சென்னையில் இருக்கும்போதெல்லாம், அவர் அழைப்பார். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், “பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜா தேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவருடைய உடல் பெங்களூருவில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *