• July 14, 2025
  • NewsEditor
  • 0

வேண்டியதை எல்லாம் நிறைவேற்றித் தரும் போடிநாயக்கனூர் சுப்ரமணிய சுவாமி; திருவிளக்கு பூஜைக்கு வாங்க! 2025 ஜூலை 25-ம் தேதி மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக…

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

திருவிளக்கு பூஜை

தமிழ்நாட்டின் அழகிய பகுதிகளில் போடிநாயக்கனூரும் ஒன்று. விஜயநகரப் பேரரசு காலத்தில் ஒருங்கிணைந்த மதுரைப் பகுதிகளை விசுவநாத நாயக்கர் 72 பாளையங்களாக வகுத்து தனி ஆட்சியை நிறுவினார். அதில் போடிநாயக்கனூர் பாளையமும் ஒன்று. இப்பகுதியை நிர்வகித்த திருமலை போடிநாயக்கர் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பரப்பளவும், இயற்கை வளம் நிறைந்ததாகவும், அதிக வரி தரும் பாளையமாகவும் இது ஆங்கிலேயர் காலம் வரை அமைந்திருந்தது என்கிறது.

இந்த ஊரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஊரின் மையத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். பழநியில் இருந்து பிடி மண் எடுத்து வந்து போடி ஜமீன்களால் உருவாக்கப்பட்ட மிகப் பழைமை வாய்ந்த இந்த கோயில், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போதைய அறங்காவலரான T.B.S.S.C.S முத்துராஜன் அவர்களின் ஒத்துழைப்பாலும் அறநிலையத்துறை அதிகாரிகளின் அனுமதியுடனும் வரும் உங்கள் சக்தி விகடன் 2025 ஜூலை 25-ம் தேதி மாலை 6 மணி அளவில் போடி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடத்த இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். இங்குள்ள கலியுக வரதானாம் சுப்ரமணிய சுவாமியின் அருளால் வளமும் நலமும் பெற்றவர்கள் அநேகம். உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட உங்கள் துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற முருகப்பெருமானுக்குரிய விசேஷங்களை மிகப் பிரமாண்டமாக நடத்திவரும் இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண விழா மிகப் பிரசித்தியானது. இந்த விழாவின் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் வள்ளி, தெய்வானை தேவியர் அணியவிருக்கும் மாங்கல்யத்தைச் சுற்றி வைத்த தேங்காயை ஏலம் விடுவதும் வழக்கம். இந்த ஆண்டும் அந்த தேங்காயை இந்து சமய அறநிலையத் துறை ஏலம் விட 52000 ரூபாய்க்கு விலை போனது. திருமண வரம் தரும் திருத்தலமாக இது போற்றப்படுகிறது. இங்கு வந்து கந்தனை வேண்டிக்கொண்டால் பிள்ளை வரம் கிடைக்கும். வீட்டில் நிம்மதியும் வளர்ச்சியும் பெருகும் என நம்பப்படுகிறது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

திருவிளக்கு பூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *