
புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானப் பயணிகள், ஊழியர்கள் 241 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் விமானம் மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்ததில் அங்கிருந்த முதுகலை மாணவர்கள் உட்பட 19 பேர் இறந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் 11ஏ இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாார். அவருடைய சகோதரர் விமான விபத்தில் உயிரிழந்தார்.