• July 14, 2025
  • NewsEditor
  • 0

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை நகராட்​சி, மாநக​ராட்​சி​யாகத் தரம் உயர்த்​தப்​பட்​டதையடுத்து நேற்று மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் மேயருக்கு தங்​கச் சங்​கி​லி, செங்​கோல் மற்​றும் அங்கி அணிவிக்​கும் விழா நடந்​தது. அமைச்​சர் எ.வ.வேலு தலைமை வகித்​தார். சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் கு.பிச்​சாண்​டி, எம்​.பி. அண்​ணாதுரை, ஆட்​சி​யர் க.தர்ப்​பக​ராஜ் முன்​னிலை வகித்தனர். துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், மேயர் நிர்​மலா வேல்​மாறனுக்கு தங்​கச் சங்​கி​லி, வெள்ளி செங்​கோல் வழங்​கி, மேயருக்​கான அங்​கியை அணி​வித்​தார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இங்கு ஆண் கவுன்​சிலர்​களை​விட பெண் கவுன்​சிலர்​கள்​தான் அதி​கம் உள்​ளனர். மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள், மேயர் அனை​வரும் மக்​கள் பணி​யில் முழு​மை​யாக ஈடு​படுத்​திக்​கொண்டு உழைக்க வேண்​டும். இங்​குள்ள மக்​களின் நீண்​ட​நாள் கோரிக்​கையை திரா​விட மாடல் அரசு நிறைவேற்றி உள்​ளது. திரு​வண்​ணா​மலை சர்​வ​தேச அளவில் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நகர​மாகி​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *