
ராய்ப்பூர்: வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதன்படி சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களில் தீவிரவாதிகள் சரண் அடையவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி கடந்த 2024-ம் ஆண்டு முதல் இதுவரை சத்தீஸ்கரில் 1,450 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.