
சென்னை மணலியிலிருந்து ஜோலார்பேட்டைக்குப் புறப்பட்ட சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீ விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
ரயில்வே நிர்வாகத்தின் முதற்கட்ட தகவலின்படி, ரயில் தடம் புரண்டதால் எரிபொருள் இருந்த ரயில் பெட்டிகளிலிருந்து எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விசாரிக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
Top angle video of #Thiruvallur train fire accident @TheFederal_News #trainaccident pic.twitter.com/QpnwiLCsWt
— Mahalingam Ponnusamy (@mahajournalist) July 13, 2025
மேலும், தீ விபத்தால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏற்பட்ட தீ, ஏழு பெட்டிகள் வரை பரவியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவுவதைத் தடுக்க ரசாயன நுரை கொண்டு தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துவருகின்றனர்.
மறுபக்கம் இந்த தீ விபத்தால் சென்னை சென்ட்ரலிலிருந்து கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகியிருக்கின்றனர்.
ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
Following the fire accident near Tiruvallur Overhead power supply has been put off as safety precautions. All efforts have been taken to put off the fire, hence the following changes have been made in the pattern of train services#SouthernRailway pic.twitter.com/nEofQzTNH7
— Southern Railway (@GMSRailway) July 13, 2025
மேலும், திருவள்ளூரிலிருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி வரை மட்டுமே புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.