
திருவனந்தபுரம்: செவிலியர் நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ரூ.8.60 கோடி குருதிப் பணம் தருவதற்கு குடும்பத்தார் முன்வந்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர், செவிலியர் நிமிஷா பிரியா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.