
சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 23 மாவோயிஸ்டுகள் காவல்துறையினர் முன்பு சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு மொத்தமாக ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையை மத்திய அரசும், மாநில காவல்துறையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள், காமாண்டோக்கள் கடந்த சில மாதங்களில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து பல மாவோயிஸ்டுகள் தற்போது காவல்துறையிடம் சரணடைந்து வருகின்றனர்.