
அகமதாபாத் விமான விபத்தின் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது விமான விபத்து விசாரணைப் பணியகம்.
அந்த அறிக்கையில், “விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இரு இன்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிவாயு நின்றுள்ளது. அதனால், விமானத்தின் இரு இன்ஜின்களும் செயல்பாட்டை இழந்துள்ளன. அவசரக்கால உதவியாக, ராம் ஏர் டர்பைன் (Ram Air Turbine) செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.
விமானிகளின் முயற்சி
ஆனால், மீண்டும் சில நொடிகளில் இன்ஜின்களுக்கு எரிவாயு செல்ல தொடங்கியிருக்கிறது. இது விமானிகள் பிரச்னையை சரிசெய்ய முயன்றதைக் காட்டுகிறது.
எரிவாயுப் பிரச்னை சரியானதும், விமானிகள் இன்ஜினை மீண்டும் செயலாக்கத்திற்குக் கொண்டுவர முயன்றுள்ளனர். முதல் இன்ஜின் ஓரளவு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால், இரண்டாம் இன்ஜின் சரியாகவில்லை.
அவர்கள் ஏற்கனவே குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால், இரு இன்ஜின்களும் முழுமையான செயல்பாட்டைத் தொடங்கி, உயரப் பறப்பதற்கான நேரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
லீவர் மற்றும் இன்ஜின் கட்டுப்பாட்டு சிஸ்டம் இடையேயான சிக்கல்
Thurst lever – காக்பிட்டில் உள்ள விமானிகள் இயக்குவதாகும். இதை இயக்குவதன் மூலம், இன்ஜினின் சக்தி உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும்.
இது விபத்தான விமானத்தில் குறைந்த லெவலிலேயே இருந்துள்ளது. விமானத்தைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, த்ரஸ்ட் லீவரைக் குறைந்த திறனுக்கு விமானிகள் வைத்துள்ளனர்.
ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை. காரணம், லீவர் மற்றும் இன்ஜின் கட்டுப்பாட்டு சிஸ்டமிற்கு இடையே துண்டிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.