
சரத்குமார், அசோக் செல்வன் நடித்த ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, அடுத்து இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார்.
கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.