
அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 747 விமான விபத்து கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது.
இதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தின் ஆய்வு செய்யப்பட்டது. அதன் முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அதில் இன்ஜின் குறித்து கூறப்பட்டுள்ளதாவது…
விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே இரண்டு இன்ஜின்களும் செயல்பாட்டை இழந்துள்ளன. இதற்கு இன்ஜின்களுக்குச் செல்ல வேண்டிய எரிவாயு நின்றதே காரணம்.
விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இன்ஜினுக்குப் போக வேண்டிய எரிவாயு ‘RUN’-ல் இருந்து ‘CUTOFF’-ற்குச் சென்றுள்ளது.
இதை காக்பிட்டில் இருந்த விமானிகளின் பேச்சும் உறுதி செய்துள்ளன.
விமானிகள் பேச்சு
காக்பிட் ஆடியோவைக் கேட்கும்போது, ஒரு விமானி இன்னொரு விமானியிடம், ‘ஏன் அதை கட் ஆஃப் செய்தீர்கள்?’ என்று கேட்கிறார். அதற்கு இன்னொருவர், ‘நான் செய்யவில்லை’ என்று கூறுகிறார்.
இன்ஜின் செயல்பாட்டை நிறுத்தியதும், புரொப்பல்லர் போன்ற சின்ன கருவி, Ram Air Turbine எமர்ஜென்சி கால உதவியாக வேலை செய்ய தொடங்கியுள்ளது.

ராம் ஏர் டர்பைன் என்பது அவசரகாலத்தில் உதவும் இன்ஜின் போன்ற கருவியாகும்.
இதை விமான விபத்து விசாரணை பணியகம் ஆய்வு செய்த சி.சி.டி.வி கேமராக்களிலும் உறுதியாகி உள்ளது.