
புதுடெல்லி: அந்தமான் அருகே கடல் கொந்தளிப்பு காரணமாக பாய்மரப் படகில் தத்தளித்த 2 அமெரிக்கர்களை, இந்திய கடலோர காவல் படையினர் நேற்று மீட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் ‘சீ ஏஞ்சல்’ என்ற நவீன பாய்மரப் படகில் பல நாடுகளுக்கு செல்லும் சாகச பயணத்தில் ஈடுபட்டனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த காற்று வீசியதில் படகின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாய்கள் எல்லாம் கிழிந்தன.