
கோவை: பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்பனையைத் தடுக்க கடும் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அமைச்சர்கள் கூறினார். மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில், பருத்தி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது.
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுஹான், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.